தமிழ் தேசிய சிறப்புக்கள் வெளிப்படுகிறது

இன்று எமது தமிழ் தேசிய இனம் தனது தேசிய இனத்தின் வெளிப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றது என்று இன்று (11) கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். மேலும்,

கிளிநொச்சியில் ஓர் மாணவன் மாற்றுத் திறனாளிகளுக்கான சோளர் மூலம் இயங்கக் கூடிய சைக்கிள் ஒன்றை வடிவமைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் வைத்திய துறைசார் கருவியினைக் கண்டுபிடித்துள்ளார். இவ்வாறு எமது இனம் தனக்கான சிறப்புப் பண்புகளை வெளிப்படுத்தி வருகின்றது.

இவ்வாறு பல ஆற்றல்களை வெளிப்படுத்தக்கூடிய பலரை இந்த மண் எமக்குத் தந்துள்ளது. கிளிநொச்சியைச் சேர்ந்தவரான வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி இன்று போதனா வைத்தியசாலையில் பொறுப்பு வாய்ந்தவராக இருப்பார் என்று யாரும் நம்பவில்லை. அவர், இக்கட்டான நிலையில் வைத்திய சேவையை மேற்கொண்டமைக்காக சர்வதேச விருதான யுனெஸ்கோ விருதினையும்  பெற்றிருந்தார்.

இவ்வாறு எமது தேசிய இனம் இன்று மீண்டும் தனக்கான பல சிறப்பம்சங்களை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. அதற்கு இவ்வாறான நூலக வாசிப்புப் பழக்கங்களும் உந்து சக்தியாக அமைந்தது - என்றார்.

No comments