பிரிகிறது ஜதேக கூட்டு?


ஜக்கிய தேசியக்கட்சியுடன் தொடர்ந்தும் இணைந்திருப்பது தொடர்பில் பங்காளிக்கட்சிகள் சலித்துள்ளன.
இது தொடர்பில் மனோகணேசன் இன்று தகவல் வெளியிடுகையில் யூஎன்பி கட்சிக்குள் புதிய இரத்தம் பாய்ச்ச கட்சி தலைமை தயாரில்லை போல் தெரிகிறது.
இக்கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாலும், "எடுத்தேன், கவிழ்த்தேன்" என்ற முதிர்ச்சியற்ற அரசியலை எப்போதும் செய்யாததாலும் இது பற்றி நாமும் அக்கறை கொள்ள வேண்டியுள்ளது.
இல்லா விட்டால் "சரிதான் போங்கடா" என நாம் சும்மா இருக்கலாம்.
இப்போ பார்த்தால் இவர்களில் சிலர் இரகசியமாக ஆளும் கட்சியுடன் உறவாடி அரசுக்கு 2/3 பெரும்பான்மை பெற்றுத்தர திட்டமிட்டு செயல்படுவதாகவும் தெரிகிறது.
"பங்காளி சிறுபான்மை கட்சிகள் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். நாம் ஐதேகவாக தனித்து போட்டியிடுகிறோம்" என நவின் திசாநாயக்க சொல்லி பார்க்கிறார். "அப்படி சொல்ல வேண்டாம்" என நவீனை திருத்த ரணில் விக்கிரமசிங்க தயாராகவுமில்லை.
எல்லோரும் தனித்து போட்டியிட்டால், இது ஆளும் கட்சிக்கு 2/3 சுலபமாக பெற்று தரும். ஆகவே இது ஆளும் கட்சியின் இரகசிய திட்டம்.
இப்படி யூஎன்பிகாரர்கள் இரகசியமாக உறவாடுவது, செயற்படுவது, சில சிறுபான்மை பங்காளி கட்சிகள் மத்தியில் ஆளும் கட்சியுடன் பகிரங்கமாகவே பேசுவோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதை என்னால் உணர முடிகிறது.
16ம் திகதி நடைபெறவுள்ள இறுதி சமரச கூட்டத்தில் தீர்வு எட்டப்படாவிட்டால், விளைவுகள் பாரதூரமாகலாம் என் தெரிவித்துள்ளார்.

No comments