சிறையில் விஸ்கி:கண்டுபிடித்ததாம் காவல்துறை?


சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் பிரமுகர் ஒருவரிற்கு மதுபானம் வழங்கியதாக சர்ச்சை வெளிவந்துள்ளது. இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த சார்ஸ் ஞானகோனுக்கு அறையொன்றை வழங்கி மதுபானம் அருந்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாக முன்னாள் ஓய்வுபெற்ற இரகசியப் பொலிஸ் அதிகாரியினால் தகவல் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஞானகோனுக்கு அறையொன்றை வழங்கி அந்த அறையில் மின் விசிறியும் வழங்கி, அவரைச் சந்திக்க வருபவர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சார்ஸ் ஞானகோனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லையெனத் தெரிவித்து, பின்னர் அவரை விடுதலை செய்துள்ளதாகவும் குறித்த ஓய்வுபெற்ற அதிகாரி தகவல் வழங்கியுள்ளார்.

அவரது அறைக்கு விஸ்கி ரக மதுபான போத்தள் வழங்கப்பட்டமை தொடர்பில் இதுவரை எந்தவித விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் தெரியவந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments