ரி-56 உடன் இருவர் மட்டக்களப்பில் கைது?
மட்டக்களப்பு கறுவாக்கேணி பகுதியில் இன்று காலை ரி-56 ரக துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து படையினர் மேற்கொண்ட விசாரணையின் போது குறிஞ்சி நகர் கறுவாக்கேணி எனும் இடத்தில் வைத்து குறித்த துப்பாக்கி மற்றும் சந்தேகநபர் ஒருவரும் பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது பெறப்பட்ட தகவலை தொடர்ந்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது ரி-56 துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படுத்தும் 27 ரவைளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
Post a Comment