எல்லோரையும் கைது செய்யவும்:ஞானசாரர்நாடாளுமன்ற தோ்தலுக்கு முன்னா் உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் தொடா்பாக குற்றஞ்சாட்டப் பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் கைது செய்யப்படவேண்டும்  என பொதுபலசேனா அமைப்பின் தலைவா் கலகொட அத்தே ஞானசார தேரா் கூறியிருக்கின்றாா்.

நாட்டில் இன்னமும் அடிப்படைவாத மற்றும் மதமாற்று செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்ச்சியாக செயற்பட்டே வருவதாக தெரிவிக்கின்ற பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். 


புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தநிலையில் அவர் நடத்துகின்ற இரண்டாவது ஊடக சந்திப்பு இதுவாகும். இந்நிலையில் இங்கு உரையாற்றிய ஞானசார தேரர், உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுவரை கைது செய்யப்படாதிருப்பது குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டார்.நாட்டில் இன்றும் மதமாற்றுச் செயற்பாடும் அடிப்படைவாத செயற்பாடுகளும் கட்டுப்படுத்த முடியாத வகையில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கின்ற பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர்,நாட்டிலுள்ள அனைத்து மத்ரஸா கல்லூரிகளையும் உடனடியாக அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

No comments