ஈரானிய கச்சாய் எண்ணெய் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா: எங்களிடம் எண்ணெய் இல்லை என்கிறது ஈரான்!!


ஈரானிய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்திருப்பது, கச்சாய் எண்ணெயின் விலை அதிகரித்ததால் உலக சந்தையைக் கையாளும் அமெரிக்காவின் ஒரு முயற்சியாகும். 

இந்நிலையில் தங்களிடம் கச்சாய் இருப்பு இல்லை என ஈரானின் எண்ணெய் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சமன் குதூசி, ஈரானின் அரசு ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தற்போது, ​​ஈரானிடம் மிதக்கும் சேமிப்பில் கச்சா எண்ணெய் பெருமளவில் இல்லை அல்லது பிற சர்வதேச சந்தைகளுக்கு விநியோகிக்கக் கூடிய இருப்பும் எங்களிடம் இல்லை என ஈரான் தெரிவித்தது.

மேலும், அமெரிக்க கருவூலச் செயலாளரின் கருத்துக்கள், வாங்குபவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதையும் சந்தையை உளவியல் ரீதியாக நிர்வகிப்பதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டவை, என்று அவர் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் கூறினார்.

உயர்ந்து வரும் எண்ணெய் விலைகளைக் குறைப்பதற்காக, கடற்பரப்பில் உள்ள சில ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா நீக்கி வருவதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு  எக்ஸ் தளத்தில் எழுதினார்.

No comments