பிரித்தானியாவில் 'தமிழ் மரபு திங்கள்' கொண்டாட்டம் அனைவரையும் அழைக்கிறோம்

பிரித்தானியாவில் தை மாதத்தை  'தமிழ் மரபு திங்களாக' பிரகடனப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் தொடக்க நிகழ்வுக்கு உங்களை
அழைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். இது ஒட்டுமொத்த
பிரித்தானிய தமிழ் மக்களினதும் ஒரு கூட்டு அபிலாஷையாகும். இந்த நிகழ்வை வெற்றிகரமானதாக்குவதற்கு சகல சமூக அமைப்புக்களையும் தனி நபர்களையும் நாம் வேண்டி நிற்கிறோம்.

இந்த தொடக்க நிகழ்வானது ஹரோவில்  440 Alexandra Avenue, Harrow, HA2 9TL என்ற முகவரியில் உள்ள  நிலையத்தில் 18 தை 2019 அன்று மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக, தமிழர் கலை, கலாசசாரம், வரலாறு மற்றும் விழுமியங்களை பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்வின் முதன்மை உரையை ஆற்றுவதற்காக தமிழகத்தின் பிரபல முன்னனி தமிழ் மருத்துவரான (சித்த வைத்தியம்) கலாநிதி சிவராமன் ( BSMS., Ph.D.) அவர்களை அழைத்திருக்கிறோம்.
தமிழ் மரபை பிரதிபலிக்கும்  தமிழ் கலை, தமிழ் கலாசாரம், தமிழ் உணவு, தமிழ் வரலாறு, மாண்பு பெற்ற  தமிழ் பெருமக்களின் வரலாறு மற்றும் புகழ் ஆகியவற்றை தை மாதம் முழுவரும் எடுத்துக்கூறுவதன் மூலமும்  'தமிழ் மரபு திங்கள்' நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஆதரவு வழங்குவதன் மூலமும்  அனைவரையும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உன்னத முயற்சியின் பங்காளிகள் ஆகுமாறு  அழைப்பு விடுக்கின்றோம்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள,

ஏ.பி. அல்போன்ஸ்
தலைவர்
தொலைபேசி: 07714227779
மின்னஞ்சல்: balphonsus@btopenworld.com
பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் சார்பாக



No comments