கோர விபத்தால் இதுவரை 12 உயிர்கள் பறிபோனது!

பதுளை - பசறை பிரதான வீதியில் மடுல்சீமை ஆறாம் கட்டை பகுதியில் இன்று (06) மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரை 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற போது 7 பேர் பலியானார்கள். இந்நிலையில் இரு சிறுவர்கள் உட்பட பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தில் மேலும் 36 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து ஒன்று வீதியை விட்டுத் தடம்புரண்டு பள்ளத்தில் விழுந்ததில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றிருந்தது.

No comments