அமொிக்கா வருந்தும் அளவுக்கு எங்களது முடிவு இருக்கும் - எச்சரிக்கும் ஈரான்

அமொிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மிரட்டலை நாங்கள் எதிர்கொள்ளத் தாயாக உள்ளோம். இதேநேரம் நாங்கள் ஏன் தாக்குதல் நடத்தினோம்
என்றளவுக்கு எதிரிருக்கு (அமொிக்கா) எங்களது முடிவு இருக்கும் என ஈரான் அமொிக்காவை எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் மவுசாவி விடுத்துள்ளார்.

நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் அமொிக்க அதிபரின் மிரட்டலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். இதேநேரம் எங்களது இராணுவத் தளபதி கொல்லப்பட்டதிற்கு நாங்கள் பழிக்கு பழி வாங்கியே தீருவோம். அமொிக்கா இத்தாக்குதலை ஏன் செய்தோம் என்று வருந்தும் அளவுக்கு எங்களது முடிவு இருக்கும் என ஈரானின் வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments