டிரம்ப் கோட்டு சூட்டுப் போட்ட ஒரு பயங்கரவாதி - ஈரான்

டொனால் டிரம்ப் கோட்டு சூட்டுப் போட்ட  ஒரு பயங்கரவாதி என ஈரான் தெரிவித்துள்ளது.


ஈரானின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் ஜாவத் அஸாரி ஜாரோமி இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்களைத் தாக்கப் போவதாகத் அமொிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தமையைக் கண்டித்தே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர்,யேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர், மொங்கோலிய அரசன் செங்கிஸ் கான் ஆகியோரைப் போல கலாசாரத்தை வெறுப்பவர் தான் டொனால் டிரம்ப்.

ஈரானையும், அதன் கலாசாரத்தையும் யாராலும் அழிக்கமுடியாது எனும் பாடத்தை திரு. டிரம்ப் விரைவில் படிக்கவிருக்கிறார் என அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

No comments