கோத்தாவிற்கு பயம்:பதவி நீக்கிய பிபிசி!


கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான உரையாடலின் எதிரொலியாக பிபிசி சந்தேசிய செய்தியாளரான அசாம் அமீன் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அவரது அமைச்சருடனான கலந்துரையாடல் குரல்பதிவு வெளியாகியுள்ளது. 

அசாம் அமீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இடையே நடந்ததாகக் கூறப்படும் தொலைபேசி அழைப்பு உரையாடல் குரல்பதிவை 2020 ஜனவரி 18 அன்று அதாவது நேற்றையதினம்  அரசாங்கம் சமூக ஊடக வலையமைப்புகளுக்கு வெளியிட்டுள்ளது.

அந்த உரையாடலில் , அசாம் யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவின் பேரணி பற்றி கூறியதுடன்,  அவர் அம்பாறையில் நடைபெற்ற பேரணி குறித்து ரஞ்சன் ராமநாயக்கவிடம் கேட்டுள்ளார். அதன்பின் பொதுஜன பெரமுன கேகாலை பேரணிக்கு வருகை தந்த ஊனமுற்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை மூடிமறைக்க இடமளிக்க வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.  இதனுடன் மொட்டின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு  தொடர்பு உள்ளது என ரஞ்சன் கூறும் போது அது தவறான தகவல்  என அசாம் சுட்டிக்காட்டியுள்ளார். உரையாடலின் முடிவில், அசாம் ரஞ்சனுக்கு சில அறிவுரைகளை வழங்குவதாகத் தெரிவதுடன் ஜேவிபியின் வாக்குகள் குறித்து உரையாற்ற வேண்டும் எனவும். தேரிவித்துள்ளார்.

மொட்டின் அரசியல்வாதிகளுக்கு அசாம் அமீன் தலைவலியாகியுள்ளார். கொடுப்பதை உண்டு சொல்வதை எழுதாமல் அசாம் கேள்விகேட்பதால் கோத்தாவின் கவனத்திற்கு அவர் வந்துள்ளார். விசேடமாக மொட்டில் ஒருவர் எழுதிக்கொடுக்கும் கேள்விகள் அல்லாமல் தனக்கு தேவையான கேள்விகளை மட்டும் தொடுப்பதால் ஆகும். அரசியல்வாதிகள் கூறும் பதிலை 'சரி  சார்' என்று கொடுக்கப்பட்ட பதில்களை ஏற்றுக் கொள்ளாமலும், பதிலுக்கு அவர்களிடம் கேள்வி கேட்பதாலும் தான். உதாரணமாக, பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பந்துல  குணவர்தன ஒரு கேள்விக்கு பதிலளித்தார், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், ஒரு அங்குல நிலம் கூட வெளிநாட்டவர்களுக்கு இலவசமாக விற்கப்படவில்லை என்று குறிப்பிட்டு இருந்ததுடன், அடுத்த வாரம் அசாம் வந்தது ஷகிரிலா இடத்திற்கான  பத்திரத்துடனே. பந்துலவுக்கு கூற பதில் இல்லாமல் போனது. இதனால் மொட்டு அரசியல்வாதிகள் அசாமுடன் கோபமடைந்தார். 

மொட்டின் தொண்டர்களுக்கு அசாமுடன் இருப்பது அதற்கும் மேலான வெறுப்பு. ஏனென்றால், நாட்டின் பெரும்பான்மையான ஊடகங்கள் மொட்டின்  அரசியல்வாதிகளின் முன்னால் வளைந்துகொடுக்கும் போது அசாம் அவ்வாறு செய்யவில்லை. 
இதன் தொடர்ச்சியாக சேறுபூசல்களை அரச தரப்பிலிருந்து அவர் எதிர்கொண்டிருந்த நிலையில் தற்போது பிபிசி அவரை பதவி நீக்கியுள்ளது.

No comments