பாதுகாப்பு நிறைந்த கிறீன் சோன் பகுதியில் உந்துகணைத் தாக்குதல்கள்!

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் அனைத்துலக நாடுகளின் தூதரங்கள் அமைந்துள்ள பிரதேசத்தினுள் உந்துகணைத் தாக்குதல்கள்
நடத்தப்பட்டுள்ளன.

ஈராக்கில் அமைந்துள்ள இரு அமொிக்க இராணுவ விமான நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இத்தாக்குதல் நடத்தப்பட்ட 24 மணி நேரத்தில் மீண்டும் அமொிக்க தூதரகம் உட்பட அனைத்துலக தூதரங்கள் இருந்து அதிக பாதுகாப்பு நிறைந்த பிரதேசமாக இருந்த கிறீன் சோன் என அழைக்கப்படும் பசுமையான பிரதேசத்திற்கு அண்மையில் மீது இரு உந்துகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இத்தாக்குதலில் எதுவித தேசங்களும் ஏற்படவில்லை என அனைத்துலக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் - அமொிக்கா இடையே ஏற்பட்டுள்ள போர் முறுகல் வளைகுடாப் பகுதியை முற்றிலும் பதற்றமாக வைத்துள்ளது. அத்துடன் கச்சாய் எண்ணையின் விலையும் அதிகரித்துள்ளது.

No comments