வளைகுடாவில் பதிலடி தாக்குதல்:பதற்றத்தில் யாழ்.குடாநாடு!


வளைகுடாவில் போர் மூண்டிருக்கிறதா இல்லையாவென்பது உறுதியாகியிராத நிலையில் யாழ்.குடாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பரபரப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.அதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பிவருகின்றனர்.குறிப்பாக மீனவர்கள் படகிற்கான எரிபொருளிற்காகவும் விவசாயிகள் பம்புகளிற்கான எரிபொருளிற்காகவும் வரிசையில் நிற்கின்றனர்.

இதனிடையே ஈராக் தலைநகர் பக்தாத்தில் க்ரீன் சோன் (புசநநn ணழநெ) எனப்படும் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில், ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, பயங்கர சத்தத்துடன் 2 முறை ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்தாத்திற்கு மேற்கே இர்பில் மற்றும் அல் ஆசாத் எனும் இரண்டு அமெரிக்கா இராணுவத் தளங்கள் மீது, ஈரான் ஏவுகணை தாக்குலை நடத்திய 24 மணி நேரத்தில், இந்த பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

No comments