கொட்டடி மீன் சந்தையான யாழ்.மாநகரசபை?


மக்களால் தெரிவுசெய்யப்பட்டு யாழ்.மாநகரசபைக்கு சென்றவர்களது மூன்றாம் தர அரசியலால் நாறிப்போயிருந்தது யாழ்.மாநகரசபை.

தன்னை இராவண தோற்றமுடையவன்.புளொட் சார்பு உறுப்பினரான தர்சானந்திடம்  திராவிட தோற்றமுண்டா ? குர்காஸ் தோற்றமுடையவர். ஏன்றார் ஈபிடிபி சார்பு உறுப்பினர் முடியப்பு ரெமீடியஸ்.

யாழ்.மாநகரசபையின் இன்றைய அமர்வில் குலத்தளவாம் குணம் என புளொட் சார்பு உறுப்பினரான தர்சானந்த் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்த கருத்தே சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

இதனையடுத்து 1987ம் ஆண்டில் இந்திய கூர்க்கா படையினர் நிலை கொண்டிருந்தனர்.அப்போது பிறந்தவரென புளொட் சார்பு உறுப்பினரான தர்சானந்தினை ரெமீடியஸ் விமர்சிக்க மீன்சந்தையாகியது.

பதிலுக்கு ரெமீடியஸை ஒரு முட்டாள். இதுதான் அவரின் குணம். இவர் ஒரு கஞ்சா வக்கீல் என திட்டித்தீர்த்தார்.

இதனிடையே தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகளை பெற்றடுப்பதற்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் போராடுகின்ற மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் இப்படியான மக்கள் பிரதிநிதிகளும் இருக்கின்றார்கள் என்பது இன்றைய யாழ் மாநகர சபை அமர்வில் வெளிப்பட்டது. சாதிகள் இல்லையடி பாப்பா இப்படி பாப்பாக்கு மட்டும் தான் சொல்லுவார்;கள். ஆனால் மக்கள் பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டு கௌரவ உறுப்பினர்கள் கேவலமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் அமர்விலிருந்து வெளியேறினர்.

No comments