வடக்கு ஆளுநருக்கு வரவேற்பு

வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எம் சார்ள்ஸினை வரவேற்கும் நிகழ்வு இன்று(வியாழக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் செ.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகர எல்லையில் வைத்து வாகன பவனியாக புதிய ஆளுநர் அழைத்து வரப்பட்டார்.
இதனையடுத்து வவுனியா நகரசபை வாயிலில் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் இசைவாத்தியம் முழங்க அழைத்து வர வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் புதிய ஆளுநரை வரேவேற்றிருந்தார்.

No comments