தீர்த்தமாடிய இளைஞன் பலி

வவுனியா – தவசியாகுளம் தீர்த்தக்குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பிள்ளையார் கதை தீர்த்தமாடல் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இறுதியில் ஊர்மக்கள் கூடி தவசியாகுளம் தீர்தக்குளத்தில் கொடிக்கம்பம் நாட்டி தீர்த்தமாடும் நிகழ்வு மரபுரீதியில் பாரம்பரியமாக நடைபெறும். அந்த வகையில் இன்று  வழமைபோல ஊர்மக்கள் கூடி தீர்த்தமாடச் சென்றனர்.
இதன்போதே ஈச்சங்குளத்தைச் சேர்ந்த ரெட்னநாதன் துஷ்யந்தன் (வயது-27) என்ற இளைஞர் தாமரைக் கொடியில் சிக்கி நீரில் மூழ்கினார்.

No comments