சிங்கப்பூர் செல்ல அனுமதி கோருகிறார் ராஜித

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதற்கமைய அவர் குறித்த மனுவை தனது சட்டத்தரணியுடாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments