நீதிமன்றுக்கு வாயடித்த மேஜர் மறியலில்; மனநோய் சோதனைக்கு உத்தரவு

தமிழர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிமன்றை அவமதித்த முன்னாள் இராணுவ மேஜயரும், குறித்த வழக்கின் எதிரிகள் சார்பு சட்டத்தரணியுமான அஜித் பிரசன்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அவரை 7ம் திகதி வரை மறியலில் வைக்கவும், உளவியில் அறிக்கையை பெறவும் இன்று (24) சற்றுமுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களான கடற்படையை சேர்ந்த துஷார மென்டிஸ், கஸ்தூரிகே காமினி ஆகியோருடன் இணைந்து கடந்த மாதம் 9ம் திகதி மேஜர் அஜித் பிரசன்ன நடத்தி ஊடக சந்திப்பில்,
நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பிலான சட்டத்தரணிகள் ஆகியோருக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையிலேயே அஜித் பிரசன்ன மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments