போராட்டத்தை முடித்து வைத்தார் திருமதி சாள்ஸ்

நிரந்தர நியமனம் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த யாழ் மாநகர சபை ஊழியர்களின் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இன்று மதியம் வடபிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர், செயலாளர் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்பாேது ”நாட்டில் ஏற்பட்டு வரும் நோய்த்தாக்கங்கள் நீங்கள் அறிவீர்கள். அவ்வாறான நிலையில் சுகாதார சேவையில் ஈடுபடும் நீங்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டது தவறு. நான் புதிதாக பொறுப்பேற்றுள்ளேன். உங்களிற்கான சகல வழிமுறைகளையும் செய்து தருகிறோம்” என ஆளுநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்றைய தினமே அனைத்து ஊழியர்களும் கடமைக்கு திரும்புவார்கள் என வடபிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

No comments