தயார் நிலையில் கட்டுநாயக்க?


கட்டுநாயக்க விமான நிலையத்தில் நோயாளர் காவு வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக விமான நிலைய சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பயணிகளை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தற்போது விமான நிலைய மருத்துவ அதிகாரிகள், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவர் உள்ளடங்கிய குழுவொன்று விரைந்து செயற்பட்டுக்கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சீனாவிலிருந்து வருகைத் தரும் பயணிகளை சோதனைக்கு உட்படுத்துவதற்காக விமான நிலையத்தில் விசேட மருத்துவ பிரிவு ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த பயணிகளை சோதனைக்கு உட்படுத்தும்போது விமான நிலைய ஊழியர்கள் பாதுகாப்பு முகமூடிகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments