கோத்தா படைகள் பிடித்த இளைஞர்களை தேடியே போராட்டம்!


வடகிழக்கு தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதி கோரி போராடிக்கொண்டிருக்கின்ற எந்தவொரு தமிழ் குடும்பமும் விடுதலைப்புலிகளிடம் நீதி கோரி போராடவில்லை.படையினரால் பிடித்துச்செல்லப்பட்ட தமது உறவுகளை கேட்டே போராடுகின்றார்கள் என்பதை ஜனாதிபதி கோத்தபாய நன்கு அறிந்துள்ளார் என தெரிவித்துள்ளார் வடமாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளித்த அவர் ஜனாதிபதி கோத்தாபாய பாதுகாப்பு செயலாளராக இருந்த போதும் இன்றைய பிரதமர் ஜனாதிபதியாகவும் இருந்த போதும் தான் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டனர்.அதிலும் யுத்தம் முடிவடைந்த மே16 அன் பின்னராக வட்டுவாகல் செல்வபுரத்திலும்,ஓமந்தையிலும் படையினரது அறிவிப்பையடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்,யுவதிகள் குடும்பங்களால் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் எவருமே யுத்தத்தில் உயிரிழக்கவில்லையென்பது அனைவருக்கும் தெரியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேவையாயின் சரண் அடைந்தவர்கள் ஒப்படைக்கப்பட்டஓமந்தை படைமுகாம் இராணுவ அதிகாரியை அழைத்து விபரம் கோரினால் யாரிடம் கையளிக்கப்பட்டவர்களை தான் ஒப்படைத்தேன் என அவர் தெரிவிப்பார் எனவும் தேவையாயின் ஜனாதிபதி அதனை அறிந்து கொள்ளட்டும் எனவும் குகதாஸ் தெரிவித்தார்.

அண்மையில் தன்னை சந்தித்த ஜநா பிரதிநிதியிடமும்,ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடமும் காணாமல் போனோர்வர்கள் விடுதலைப்புலிகளால் பிடித்து செல்லப்பட்டவர்களென கோத்தபாய விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments