கடத்தல் தளபதிகளின் வழக்குகளை இரத்து செய்ய நடவடிக்கை

தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேக நபர்களான முன்னாள் கடற்படை தளபதிகள் வசந்த கரன்னகொட (அட்மிரல் ஒப் த ப்ளீட்) மற்றும் டிகேபி.தஸாநாயக்க (ரியர் அட்மிரல்) ஆகியோருக்கு எதிரான வழக்குகளை இடைநிறுத்துமாறு கடந்த அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு இன்று (27) அறிவித்துள்ளது.
இந்த இரு தளபதிகளுக்கும் எதிராக குறித்த 11 இளைஞர்களையும் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தான் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் ஆணைக்குழுவை அமைத்து அதன்மூலம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

No comments