எல்லாம் பொய் என்கிறார் ஜங்கரநேசன்?


முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுடனான கூட்டு சாத்தியமற்றிருப்பதாக தெரிவித்துள்ள ஜங்கரநேசன் புளொட் கூட்டையும் மறுதலித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பினுர்டாக கூட்டமைப்பில் இணைந்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக சொல்லப்படுவது இட்டுக்கட்டப்பட்ட வதந்தியாகும் என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.


நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்படும் மாற்று அணியில் இணைந்து கொள்ளாமல் புளொட் அமைப்பினூடாக கூட்டமைப்பில் இணைந்த போட்டியிடப் போதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில்  அவர் மேலும் தெரிவித்ததாவது..

புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், அக்கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஐதீபன் ஆகியோருடன் தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளைக் கொண்டிருக்கிறேன்.

குறிப்பாக மாகாண சபையில் எனக்கேற்பட்ட நெருக்கடிகளின் போது என்னைப் பதவி விலக்குவது பொருத்தமானது அல்ல என்று முதலமைச்சரிடம் கூட பல தடவைகள் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இந்த தொடர்புகள் யாவும் அரசியல் ரீதியானவை அல்ல. ஆனாலும் அந்தவிற்கு எங்களுக்கிடையில் தொடர்புகள் இருக்கின்றன.

மற்றப்படி புளொட்டுக்கு ஊடாக கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக் கேட்டு சித்தார்த்தன் அவர்களுடன் நான் பேசினேன் என்பதில் எவ்விதமான உண்மையும் இல்லை. 

மேலும் நான் ஏற்கனவே சொன்னது போல முதலமைச்சர் அவர்களுடனான கூட்டணியில் நான் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் என்ற விடயத்தில் அரசியலில் கூட்டு எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான எனது கருத்து நிலைப்பாட்டின் படியும் சாத்தியமற்றதாகவே கருதுகிறேன்.


அதிலும் மற்றப்படி அவருடன் எனக்கு எவ்விதமான தனிப்பட்ட முரண்பாடுகளும்; இல்லை. அதே போன்றே அவருக்கும் என்னுடனான தனிப்பட்ட முரண்பாடுகள் எவையும் இல்லை. அரசியல் கடந்து இருவருக்கும் இடையிலான அன்பு சார்ந்த உறவு நீடிக்குமென்றே கருதுகின்றேன் என்றார்.

No comments