கொலை தளபதிக்கு பதவி உயர்வு?


தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கப்பம் கோரி கடத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கில் இருந்து பிரதான சந்தேகநபர்களான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, மற்றும் முன்னாள் கடற்படை பேச்சாளர் D.K.P Dassanayake ஆகியோரை விடுவிக்குமாறு கோத்தபாயா ராஜபக்சே நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஜகத் பாலபெட்டபந்தி தலைமையிலான அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பரிந்துரை செய்து இருக்கிறது. இதுமட்டும் இன்றி இந்த சந்தேக நபர்களை தப்ப வைப்பதற்காக ராஜபக்சே தரப்பின் ஏற்பாட்டில் சட்டமா அதிபர் நீதிமன்ற சம்பிரதாயத்தை மீறி பிரதம நீதியரசருக்கு ஜூரி சபை ஒன்றை பெயரிடுமாறு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் சொல்லுகிறார்கள். அதே போல கோத்தபாயா ராஜபக்சே தரப்பின் அச்சுறுத்தலுக்கு உள்ளான நீதிவான்களில் இந்த வழக்கை விசாரித்த நீதிவான் Ranga Dissanayake அவர்களும் அடங்குவார்
அதுமட்டும் இன்றி இந்த வழக்கோடு தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேவி சம்பத் என்கிற லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி உட்பட வழக்கின் சந்தேகநபர்கள் 14 பேரும் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். கோத்தபாயா ராஜபக்சே நிருவாக்கத்தால் D.K.P Dassanayake அவர்களுக்கு ரியல் அட்மிரல் பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது .D.K.P Dassanayake அவர்களை கோத்தபாயா ராஜபக்சே அவர்கள் அடுத்த கடற்படை தளபதியாக நியமிக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது

2008-2009 காலப்பகுதியில் கடத்தப்பட்ட இந்த 11 மாணவர்களும் கொழும்பிலுள்ள ‘பிட்டு பம்புவ’ கடற்படைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்கள். பின்னர் திருகோணமலை கடற்படைத் தளத்தில் உள்ள ஒரு துப்பாக்கித் தளத்தில் வைத்துக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.இந்த கடத்தல்கள் பற்றி இலங்கை பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாயா ராஜபக்சே அறிந்து இருந்தார் என்பதை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்கிற அமைப்பு உறுதிப்படுத்தி இருந்தது . திருகோணமலை தடுப்பு முகாமிற்க்கான பொறுப்பதிகாரியாக இருந்த ஆர் எஸ் பி ரணசிங்கே நேரடியாக கோத்தபாயா ராஜபக்சே அவர்களோடு தொடர்பில் இருந்தார் என்பதையும் இந்த அமைப்பு உறுதிப்படுத்தி இருந்தது . அப்போது கிழக்கு மாகாண கட்டளை அதிகாரியாக இருந்த எஸ் எம் பி வீரசேகர , பிரதி கட்டளை அதிகாரியாக இருந்த சிசிர ஜெயக்கொடி மற்றும் கோத்தபாயா ராஜபக்ஷே ஆகியோர் இந்த தடுப்பு முகாமுக்கு செல்ல கூடியவர்களாக இருந்தார்கள் என இந்த அமைப்பு உறுதி செய்து இருந்தது.

கோத்தபாயா ராஜபக்சே உட்பட்ட உயர் மட்ட தலைவர்கள் சம்பந்தபட்ட கொடூர வழக்கில் இருந்து சம்பந்தப்பட்ட சகல ஆட்களையும் விடுவித்து கொள்ள ராஜபக்சே நிருவாகம் உறுதியாக இருக்கிறது

No comments