இனியாவது கூட்டு சேரட்டும்: அழைப்புதமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றினைந்து ஒரு தேசியக் கட்சியாக மாறுகின்ற போதுதான் எதிர்வரும் காலங்களில் ஏற்படப்போகும் சவால்களை முகங்கொடுக்க முடியும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சபா.குகதாஸ் இவ்வாறு  கோரிக்கை  விடுத்துள்ளார்.தமிழ் தலைமைகள் தங்களுக்குள் முரன்பட்டு மாற்றுத் தலைமைகள், மாற்று கட்சிகள் என்று கால நேரத்திற்கு உரிய செயற்பாடுகள் இல்லாமல் எல்லோரும் ஒன்றுபட்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கடந்த 2004 ஆம் ஆண்டு எவ்வாறு பெற்றேடுத்தார்களோ அவ்வாறு கூட்டாக ஒன்றுபட வேண்டும் என சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் தென்னிலங்கையில் வருகின்ற சவால்களை ஜனநாயக ரீதியில் முறியடிக்கக் கூடியதாகவும் சர்வதேச ரீதியில் நாட்டின் பூகோள நலம் சார்ந்து பங்கெடுத்துக்கொண்டிருக்கும் நாடுகள்இ தமிழ் மக்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளக்கூடியவாறும் அமையும் என்பதுதான் தனது கோரிக்கை என சபா.குகதாஸ் மேலும்  தெரிவித்துள்ளார்.இன்னும் காலம் கடக்கவில்லை தமிழ் கட்சிகள் அனைத்தும் மனம் விட்டு பேசி தமது வரட்டு கௌரவங்களை விட்டு தமிழ் மக்களுடைய தேசிய நலன் சார்ந்து செயற்பட வேண்டும் என சபா.குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.குறிப்பாக வடகிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைக்காக ஜனநாக வளியில் தங்களுடைய பூரன பங்களிப்பை கொடுத்திருந்தார்கள் அது மாத்திரமின்றி  விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் தங்களுடைய உயிர்களை தியாகம் செய்து இருக்கின்றார்கள் என சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஒரு விலை மதிப்பிட முடியாத போராட்டம் நடைபெற்றதாகவும் அந்த தியாகங்கள் தலைவர்களுடைய சேர்வுகள் எல்லாம் ஒரு பெறுமதியாக்கப்பட வேண்டுமாக இருந்தால் இன்று இருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகள் சார்ந்த தலைவர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என சபா.குகதாஸ் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments