குடுமி பிடிச்சண்டை உச்சம்: கண்டுகொள்ளப்படாத மக்கள் பிரச்சினைகள்?கூட்டமைப்பின் வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் உட்கட்சி மோதல்கள் உச்சம் பெற்றுள்ள நிலையில் மக்களது பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படாதிருப்பதாக மக்களது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

குறிப்பாக வலிகாமம் மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட சங்கானை 'பிளக்' வீதியில் பல வருடங்களாக கைவிடப்பட்ட காணி மக்களுக்கு அச்சுறுத்தலாகவுள்ளது. டெங்கு நுளம்பு பெருகுவதுடன் மயிர்க்கொட்டிகள் வீதியில் தொங்குவதால் பயணிக்கும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனரென புகாரிடப்பட்டுள்ளது.

எனினும் இதனை உள்ளுராட்சி சபை கண்டுகொள்ளவில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments