ஈரானின் 52 இடங்களின் மீது தாக்குதல் நடத்துவோம் - டிரம்ப்

ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களின்மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பதில் தாக்குதல் நடத்தும் விதமாக அமெரிக்காவின் சொத்துகளைத் தாக்கப்போவதாக ஈரான் பேசிக் கொண்டிருக்கிறது. அப்படித் தாக்கப்படும்பட்சத்தில் எங்களது எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும். ஈரானின் முக்கிய 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என பதிவிட்டுள்ளார்.

No comments