நொருங்கிய வான்; இராணுவத்தினர் உட்பட ஐவர் காயம்

வவுனியா - வேப்பங்குளம் பகுதியில் நேற்று (12) இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு இராணுவத்தினர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புளியங்குளம் பகுதியிலிருந்து வவுனியா திசை நோக்கிச் சென்ற இராணுவ வாகனம் ஒன்று ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் வைத்து மோட்டார் வாகனம் ஒன்றில் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

No comments