யாழ்ப்பாண விமான நிலையத்தை முடக்க சதி!


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் மூலமான விமானப்போக்குவரத்து சேவைகள் தொடர்ச்சியாக குழறுபடிகளால் மக்கள் நம்பிக்கையினை இழந்துவருகின்றது.கொழும்பு –சென்னை விமான கட்டணத்துடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணம் -சென்னை கட்டணம் சுமார் பத்தாயிரம் வரையில் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இதனிடையே இரட்டிப்பு வரி அறவிடுவதாலேயே இக்கட்டண அதிகரிப்பு இருப்பதாகவம் இந்திய விமானப்போக்குவரத்து அதிகாரிகள் தலையீடு செய்து அதனைக் குறைப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக சென்னைக்குச் செல்லும் சமயம் சென்னை விமான நுலையத்திற்கும் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கும் மட்டும் அறவிடப்படும் வரியானது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னை நோக்கிப் பறக்கும் விமானங்களிற்கு யாழ்ப்பாணம் மற்றும் சென்னை விமான நிலையங்களிற்கான வரியுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குமாக மூன்று இடங்களிற்குமாக அறவிடப்படுவதாக சொல்லப்படுகின்றது.அவ்வாறு வரியினை அறவிடுவதன் மூலமே அதிகரித்த கட்டணம் அறவிடப்படுகின்றது.

அதேபோன்று சென்னை - கட்டுநாயக்கா ஊடான விமான சேவையில் 30 கிலோ பொதி அனுமதிக்கப்படும் நிலையில் யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான சேவையின்போது மட்டும் 15 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றது.
இதனை கருத்தில் கொண்டு பெரும்பாலான மக்கள் கொழும்பு சென்று சென்னை செல்ல முற்படுவதால் திட்டமிட்டு யாழ்.விமான நிலையத்தை மூடும் சதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

No comments