யாழ் பல்கலை மாணவி எடுத்த சோக முடிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் மல்லாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி - பரந்தன் பகுதியை சேர்ந்த யதுர்சனா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினமே கிளிநொச்சியில் இருந்து மல்லாகத்தில் தங்கியுள்ள வீட்டிற்கு வந்த குறித்த மாணவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments