அமெரிக்காவிற்கு அஞ்சும் கோத்தா?தெருவோர ஓவியங்களில் தெற்கில் அமெரிக்க அரசிற்கு எதிராக கீறப்பட்ட ஓவியங்கள் அவசர அவசரமாக கோத்தாவின் உத்தரவு படி அழிக்கப்பட்டுவருகின்றது.
இதனிடையே மிலேனியம் சலேஞ்ச் எனும்அபிவிருத்தி உடன்படிக்கையை மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நால்வர் கொண்ட குழுவை நியமிக்க  அமைச்சரவை இன்று (19) தீர்மானித்துள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் ஒக்டோபர் 29 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த எம்.எம்.சி. உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இருப்பினும் இந்த திட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு மிலேனியம் செலேஞ்ச் திட்டம் தொடர்பில் முழுமையாக மீளாய்வு செய்து அரசாங்கத்திற்கு மீளாய்வுகளை சமர்ப்பித்ததற்காக நால்வர் கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கும் அந்த குழுவினால் சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் வரையில் அமைச்சரவையினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வகையில் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லலித ஸ்ரீ குணருவன் தலைமையிலான நால்வரடங்கிய குறித்த குழுவில், போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.ஜயவீர, ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன, நாலக்க ஜயவீர ஆகிய உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments