கோத்தாவிடம் உதவி கோரும் கர்தினால்?

நத்தார் தினத்தில் தெய்வ வழிபாடுகள் நடைபெறும் சகல தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இன்று (19) கொழும்பிலுள்ள காதினல் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். பாதுகாப்பு தொடர்பில் கடந்த காலத்தில் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதனால், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இவ்வாறு மேலதிக பாதுகாப்பை கோரியதாகவும் காதினல் குறிப்பிட்டுள்ளார். தான் வேண்டிய பாதுகாப்பை வழங்குவதாக அரசாங்கம் உடன்பட்டிருப்பதாகவும் காதினல் அறிவித்துள்ளார். ஏதும் தாக்குதல்கள் மீண்டும் மேற்கொள்ளப்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கலாம் என்ற கருதுகோளின் அடிப்படையில் மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு அரசாங்கத்திடமும், பாதுகாப்பு அமைச்சிடமும் இந்த வேண்டுகோளை விடுத்ததாகவும் காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மேலும் கூறியுள்ளார்.

No comments