போட்டுவிடுவோம்: எம்பியெழுந்த ஈபிடிபி புள்ளி!


ஈபிடிபி வசமுள்ள ஒரேயொரு உள்ளுராட்சி மன்றமான வேலணை பிரதேச சபையில் இன்றைய தினம் உறுப்பினர்களிடையே வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.
வேலணை தவிசாளருடைய வாகனத்தை சபை உறுப்பினர் அனுமதி இன்றி பயன்படுத்தியதாகவும் அதற்கு ஒழுக்காற்று நடவெடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.தே.கட்சி உறுப்பினர் ஒருவர் முன்வைத்த கோரிக்கையை அடுத்து பொதுஜன பெரமுன, மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கும் த.தே.கூட்டமைப்பு, ஐ.தே.கட்சி உறுப்பினர்களிற்கும் இடையில் தோன்றிய தர்க்கம் அடிதடியில் முடிந்தது.
முன்னாள் தவிசாளரான சின்னையா சிவராசா (போல்) என்பவர் தகாத வார்த்தைகளை சபைக்குள் பேசி “எங்களுடைய ஆட்சி என்னவும் செய்வோம். எல்லோரையும் துலைச்சிடுவன்” என எச்சரிக்கை செய்ததாலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தவிசாளரை கோரிய போதும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் வெளிநடப்பு செய்ய முற்பட்ட வேளை சி.சிவராசா எனும் உறுப்பினரால் தாக்கப்பட்டு நெஞ்சு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

No comments