உள்ளே போகப்போகிறேன்:ரிசாட்?


தான் விரைவில் கைது செய்யப்படுவார் என்று இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நடைமுறையில் உள்ள சூழ்நிலையின் அடிப்படையில் இதுபோன்ற ஒரு விஷயம் நடக்கக்கூடும் என்று அவர் தனது அரசியல் ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார்.
தன் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவர் கைது செய்யப்படுவார் என்றும், தான் சிறைச்சாலையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் மன்னாரில் உள்ள அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பொதுத் தேர்தல் குறித்து அவருக்கு தெரியப்படுத்தபட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் பதியுதீனின் சகோதரர், தனக்கும் அவரது சகோதரருக்கும் தீங்கு விளைவிக்க வேண்டாம் என்று தற்போதைய அரசாங்கத்தின் பல உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments