வேலணை விவகாரம்: அடித்தவரும், அடிவாங்கியவரும் வைத்தியசாலையில்!


வேலணை பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் போட்டுதள்ளுவேன் என சாவல் விட்ட ஈபிடிபி பிரமுகர் இறுதியில் வைத்தியசாலையில் பதுங்கி கொண்ட பரிதாபம் நடந்துள்ளது.

நேற்றைய தினம் ஆளும் தரப்பான ஈபிடிபி சார்பு துணை தவிசாளருக்கும்;, எதிர்த்தரப்பு கூட்டமைப்பு உறுப்பினர் இருவருக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதம் இறுதியில் கைகலப்பாக மாறியது.தன்னை ஈபிடிபி துணை தவிசாளர் தாக்கியதாக தெரிவித்து கூட்டமைப்பு உறுப்பினர் நாவலன் என்பவர் வைத்தியசாலையில் தங்கியிருக்க் போட்டிக்கு தன்னை கைது செய்வதை தடுக்க ஈபிடிபி தவிசாளரும்; வைத்தியசாலையில் தங்கிக்கொண்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் தெரிய வருவது யாதெனில் ,வேலனைப் பிரதேச சபையின் கூட்டத்தில் முன்னாள் தலைவரும், தற்போதைய ஆளும் கட்சி துணை தவிசாளருமாக சிவராசா போல் மற்றும் தற்போதைய எதிர்கட்சியின் உறுப்பினருமான கருணாகரன் நாவலன் என்பவருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் எல்லைமீறி கைகலப்பில் முடிவடைந்துள்ளது. இதில் சிவராசா போல் வேலனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையிலும், கருணாகரன் நாவலன் ஊர்காவற்றுறை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் பிரதேச சபை தலைவர் கருணாகரமூர்த்தி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

No comments