நாளை ஆளுநர் பதவியேற்பு?


வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை சுகாதார அமைச்சின் தற்போதைய செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளார்.

இன்று நாடாளுமன்றிற்கு விஜயம் செய்திருந்த பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது தற்போதைய பதவியிலிருந்து விடுவித்துக்கொள்ளும் ஆவணங்களில் ஒப்பமிட்டதாக தெரியவருகின்றது.

நாளை வெள்ளிக்கிழமை பெரும்பாலும் ஆளுநர் பதவிக்கான சத்தியபிரமாணத்தினை பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற கூட்டத்தின்போதே வடக்கு மாகாண ஆளுநராக  பி.எஸ்.எம்.சார்ள்ஸினை நியமிக்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 

அதன்பிரகாரம் முன்னாள் சுங்க பணிப்பாளரும் சுகாதார அமைச்சின் தற்போதைய செயலாளருமான சார்ள்ஸ்; வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார்.

இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 'வடக்கு ஆளுநர் பதவியை முரளிதரன் ஏற்கவில்லை. பி.எம்.எஸ்.சார்ள்ஸை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர் விருப்பம் தெரிவித்தால் ஆளுநராக நியமிக்கப்படுவார்' என கூறியிருந்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் நியமனம் தாமதமாகிவருகின்ற நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.

No comments