ஈழம் பிக்பொஸ்:பல்கலைக்கழக மாணவர்கள் கருவிகளானார்களா?


ஜக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித்தை தோற்கடிக்க ரணில் முழு அளவில் முயற்சிகளை முன்னெடுத்ததாக தற்போது கடுமையான குற்றச்சாட்டுக்கள் வலுவாக முன்வைக்கப்பட தொடங்கியுள்ளது.

இதன் ஒரு அங்கமாகவே யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயன்படுத்தப்பட்டமை அம்பலமாகியுள்ளது.

மாணவர்களால் கூட்டடப்பட்ட ஜந்து கட்சி கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட 13 அம்ச கோரிக்கையினை கோத்தா ஏற்கப்போவதில்லையென்பது அப்பட்டமாகவே அனைவரிற்கும் தெரிந்திருந்தது.

இந்திய அழுத்தத்தை அடுத்து சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்க ரணில் சம்மதித்த போதும் வெற்றி பெற்று மீள் எழும்புவதை விரும்பவில்லை.

இதன் தொடர்ச்சியாக சுமந்திரன் ஊடாக நம்பிக்கையான முகவர்களை முன்னிறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஜந்து கட்சி கூட்டு மற்றும் 13 அம்ச கோரிக்கை முன்வைக்கப்பட தெற்கில் அது தமிழீழத்தை சஜித் தமிழ் மக்களிற்கு வழங்கப்போவதாக பிரச்சாரங்களை முன்னெடுக்க சாதகமாகியது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களையே பொருட்டில் எடுக்காத சுமந்திரன் கூட்டங்களில் தலை காட்டி பேட்டிகளை தட்ட மறுபுறம் ரணில் வடக்கில் சுமந்திரன் சகிதம் அலைந்து திரிந்து தமிழீழம் கொடுக்கும் பிரச்சாரத்தை வலுப்படுத்தினார்.

இதன் தொடரச்சியாகவே பிரதான போட்டியாளர்களான கோத்தா மற்றும் சஜித் இடையே இரண்டு இலட்சம் வாக்கு வித்தியாசத்தை இந்திய உளவு அமைப்புக்கள் கணக்கிட்டிருந்தன.அதனை வடக்கில் நிவர்த்தி செய்ய திட்டமிட்டிருந்தன.

ஆனால் தெற்கில் முன்னெடுக்க இனவாத பிரச்சாரம் 10இலட்சம் வித்தியாசத்தில் கோத்தாவை வெல்ல வைக்க வழிகோலியுள்ளது.

அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலினை இலக்கு வைத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் இது பற்றி அறிந்தும் மாணவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டும் எதனையும் செய்ய முடியாதிருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டும் சுதாகரித்து கூட்டத்திலிருந்து வெளியேறியிருந்தது.

இதனை ரணிலுடன் இணைத்து செயற்பட்ட தெற்கு அரசியல் வாதியொருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இதனிடையே தனக்கெதிராக குரல் எழுப்பும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களது பல முக்கிய ரகசிய ஆவணங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமையும் அதன் ஒரு அங்கமாக சொல்லப்படுகின்றது.

அலரி மாளிகையில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தொடர்பான முக்கிய ஆவணங்களே கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதற்கமைய அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஊழியர்களிடம் இந்த கடிதங்கள் கிடைத்துள்ளன.

பிரதமராக ரணில் விக்ரமசிங்க செயற்பட்ட காலப்பகுதியில் அவரது அமைச்சரவை அமைச்சர்களின் மோசடி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான தகவல்கள் இந்த கடிதத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
மீட்கப்பட்ட கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பொறுப்பில் எடுத்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments