குடியுரிமை விவகாரம்; இந்தியாவுடன் ததேகூ பேச்சு?

இந்தியாவில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பாக சட்டத் திருத்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இது தொடர்பாக தமிழகம் சார்பில் மத்திய அரசிடம் சுட்டிக்காட்டப்பட்டதுடன் ஈழத் தமிழ் அகதிகள் விடயத்தைில் கரிசனை காட்டவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும், இலங்கையில் அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுக்கவும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
இலங்கை அகதிகள் விடயத்தில் தமிழர் தரப்பின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளதென வினவப்பட்ட போதே இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைக் கூறியுள்ளார்.

No comments