இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தப் பலமே தேவை

புலனாய்வு நடவடிக்கையை வலுப்படுத்துவதன் மூலம் மாத்திரமே இஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (13) நிகழ்வு ஒன்றில் பேசும் போது இதனைத் தெரிவித்தார். மேலும்,

புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தரை, கடல் மற்றும் ஆகாய மார்க்கம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் புதிய பயங்கரவாதம் தொடர்பில் புலனாய்வு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதே முக்கியத் தேவையாகும் 2008ம் ஆண்டு இந்தியாவில் மும்பை நகரத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் பங்கு கொள்ளவில்லை. ஆனால் கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய அனைவரும் இலங்கையர்கள். இந்த அச்சுறுத்தல் எமது நாட்டுக்கு மாத்திரம் வரையிறுக்கப்பட்ட அச்சுறுத்தல் அல்ல பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் மேம்பாட்டுக்காக இந்த இஸ்லாமிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.

இந்த வருடத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் இலங்கையின் இஸ்லாமிய பயங்கரவாதிகள் படகு மூலம் இந்தியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்தமை தொடர்பான தகவல்களின் காரணமாக இந்தியா முழுவதும் பாதுகாப்பு படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். எமக்கும் இதனை கட்டுப்படுத்த முடியாமல் போனால் இந்தியா, மாலைதீவு, பங்களாதேஷ் மாத்திரமன்றி மியன்மார், தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படும், இதன் காரணமாக இந்த புதிய பயங்கரவாத அச்சுறுத்தலை முழுமையாக தோற்கடிக்க வேண்டும்.

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு முடியாமல் முழு உலகமும் இருந்த சந்தர்ப்பத்தில் தான் நாம் வெற்றியை பெற்றோம். இதன் காரணமாக அது இலங்கைக்கு கிடைத்த வெற்றி மாத்திரமல்ல முழு உலகிற்கும் வெளிச்சத்தையும், புதிய எதிர்பார்ப்பையும் தேடித்தரும் விடயமாக அமைந்தது. அமெரிக்காவில் எவ்.பி.ஐ நிறுவனத்தினால் 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புலிகள் அமைப்பு உலகில் வலுவானதும் முக்கிய பயங்கரவாத அமைப்பாகவும் உத்தியோகபூர்வ ரீதியில் பெயரிப்பட்டது. அமெரிக்காவிற்கு புலிகள் அமைப்பினால் நேரடியாக அச்சுறுத்தல் இல்லாத போதிலும் அவர்கள் இதனை உலகின் மிக மோசமான பயங்கரவாத அமைப்பாக கருதினர்.

இவர்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக அல்கைதா அமைப்பு கூட அமெரிக்காவினால் பட்டியல் இடப்பட்டிருந்தது. புலிகள் அமைப்பிலும் பார்க்க மிகவும் குறைந்த மட்டத்தில் இந்த அமைப்பு இருந்தது. இதனால் நாம் அன்று எத்தகைய பயங்கரவாதத்தை எதிர்கொண்டோம் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. இருப்பினும் 2009 ஆம் ஆண்டில் நாம் இந்த பயங்கரவாத அமைப்பை திட்டவட்டமாக தோற்கடித்தோம். நாம் இந்த வெற்றியை பெற்றுக்கொள்ளும் வரையில் சிலர் இதனை செய்ய முடியாது என்று கூறினர். அந்த காலப்பகுதியில் நான் சந்தித்த முக்கிய பிரபுக்கள் பலர் எனக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

அந்த ஆலோசனை என்னவெனில் செய்யமுடியாதவற்ற முயற்சிக்க வேண்டாம் என்பதாகும். நாம் இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில் மன வலிமை இல்லாமலும் அவதானம் செலுத்தாமலும் எந்வொரு வெற்றியையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதாகும். 2005 ஆம் ஆண்டு நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட விடயத்திற்கு நான் நன்கு அறிந்திருந்த பொருத்தமான நபரை பாதுகாப்பு செயலாளராக நியமித்தேன். அவரின் சிபாரிசின் அடிப்டையில் ஏனைய பொருத்தமான அதிகாரிகளை ஏனைய பொருத்தமான பதவிகளுக்கு நியமித்து யுத்தத்தை வெற்றி கொள்ளும் ஆயுத படை இராணுவ பொறிமுறையை கட்டியெழுப்பினேன்.

இன்று அதே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உங்களது ஜனாதிபதி மற்றும் படைத்தளபதி என்ற ரீதியில் பொது மக்களினால் அமோக வெற்றி ஆணையினால் நியமிக்கப்பட்டுள்ளார். நாம் மீண்டும் ஒரு மறை இந்த நாட்டின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றமை எமது நாட்டின் தேசிய இறைமை மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் சந்தர்ப்பத்திலே ஆகும். புலிகள் அமைப்பிற்கு எதிராக கிடைத்த வெற்றியின் 10 வருட நிறைவை கொண்டாட இருந்த சில தினங்களில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினால் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆசியாவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாடு சிறிய தீவாகும். இருப்பினும் இங்கு எதுவும் சிறிய அளவில் இடம்பெறுவதில்லை.

1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கை போன்று தெற்கில் ஆயுத கிழர்ச்சியினால் நாம் உலகின் மிக மேசமான மோதல்களைக் கொண்ட பூமியாக அடையாளப்படுத்தப்பட்டோம். இதன் பின்னர் தரையிலும், கடலிலும், ஆகாயத்திலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய ஆற்றல் இருந்த உலகின் மிக மோசமான பயங்கரவாத அமைப்பு நாட்டில் இருந்தது. ஆசியாவில் சிவில் மக்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட பாரிய மற்றும் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் இந்த வருடத்தில் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற சம்பவமாகும். நாடு சிறியதாயினும் நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால் சிறியதல்ல. - என்றார்.

No comments