மாற்று தலைமை தயாராம்:சுரேஸ்!


தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டுமென்று பேசுகின்ற எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்களே கூட்டமைப்பில் இருந்த கட்சிகள்; வெளியேறுவதற்கு பிரதான காரணகரத்;தாக்களாக இருந்திருக்கின்றனர். கூட்டமைப்பில் எந்தவிதமான அமைப்பு முறையும் இல்லாமல் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்ட தமிழரசுக் கட்சியை நிலைநிறுத்துகின்ற வகையிலையே கூட்டமைப்பை பயன்படுத்தி வந்தார்கள். அவ்வாறானவர்கள் இன்றைக்கு ஐக்கியம் என்று பேசுவது வெறுமனே வாயளவில் மாத்திரமே தவிர உண்மையான ஐக்கியத்திற்காக அல்ல என தெரிவித்துள்ளார்; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமா சுரேஸ் பிரேமச்சந்திரன்.

இன்றைக்கு மாற்று அணி தேவையில்லை. அதற்கு வெற்றி கிட்டாது என்றெல்லாம் எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றதைப் பார்த்தால் மாற்று அணி குறித்தான அச்சம் அவருக்கு ஏற்பட்டிருக்கின்றதாகத் தான் பார்க்கிறோம். மாற்றுத் தலைமை என்பது தேவை என்ற அடிப்படையில் அது உருவாக்கப்பட்டு விட்டது. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அது வெற்றியளிக்கும் எனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணி தேவையில்லை என்றும் மாற்று அணி ஒரு சவால் இல்லை என்றும் அவர்களுக்கு வெற்றி கிடைக்காது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளமை தொடர்பிலேயே சுரேஸ்பிறேமச்சந்திரன் பதிலளித்துள்ளார்.
கூட்டமைப்பு மக்களிடமிருந்த பெற்றுக் கொண்ட ஆணையைக் கைவிட்டு அரசாங்கத்தைப் பாதுகாப்பதையே தங்களது முதன்மையான செயற்பாடாகக் கருதி செயற்பட்டு வந்தார்கள்.உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்திற்கு பிரச்சனைகள் வந்த பொழுதும் அரசாங்கம் கவிழுகின்ற சூழ்நிலைகள் வந்த பொழுது அரசாங்கத்தை பாதுகாப்பதில் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்தார்கள். ஆனால் தமிழ் மக்களினுடைய அரசியல் ரீதியிலான தேசிய இனப் பிரச்சனைக்குரிய தீர்வு என்பதற்கப்பால் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய ஏனைய பிரச்சனைகளைக் கூட தீர்ப்பதற்கு இவர்கள் தவறிவிட்டார்கள எனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


No comments