களத்தில் குதித்த சஜித்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (18) இரவு கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சற்றுமுன் அங்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச, எஸ்.எம்.மரிக்கார் மற்றும் அரசியல் ஆர்வலர் சிறிலால் லக்திலக ஆகியோர் சம்பிக்கவை சந்தித்தனர்.

ஆணை இல்லாமல் மஜிஸ்திரேட்டுக்கும் அறிவிக்காமல் நுழைந்த பொலிஸார் தன்னை கைது செய்துள்ளனர் என்று இன்று (18) சற்றுமுன் கைது செய்யப்பட்ட சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.
அவரை கைது செய்யும் போது முகநூலில் வெளியிட்ட நேரலை காணொளி ஒன்றின் ஊடாக இதனை சம்பிக்க தெரிவித்துள்ளார்.

No comments