கூடைக்கு திரும்புகின்றது கோத்தா உத்தரவுகள்!



ஜனாதிபதி கதிரையேறியதும் கோத்தபாய நாள் ஒன்றிற்கு நூறு என சுற்றுநிருபங்களை பிறப்பித்தார்.அதில் அரச அதிகாரிகள் அரச செலவில் வெளிநாடு செல்ல தடையெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவையும் இலங்கை அரசுகளை வழிநடத்தும் அதிகாரிகள் மட்டத்தில் செல்லகாசாகியுள்ளது.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் உலக உணவுத் திட்டம் தொடர்பாக இடம்பெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கம்போடியா நாட்டிற்கு பயணிக்கின்றார்.

உலக உணவுத் திட்டம் தொடர்பில் நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகள் பங்குகொள்ளும் மாநாட்டிலே பங்கெடுக்க இலங்கையின் ஒன்பது மாகாண பிரதம செயலாளர்களும் கம்போடியா பயணமாகின்றார்.

இக்குழுவில் வடக்கு மாகாண பிரதம செயலாளரும் பங்குகொள்வதற்காக சென்றுள்ளார்.

நாளை முதல் 5 நாட்கள் இடம்பெறும் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதம செயலாளர்கள் அனைவரும் அடுத்த வாரமே நாடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த பயணத்திற்காக ஜனாதிபதியின் செயலாளர் அனுமதி வழங்கியுளமையும் குறிப்பிடத்தக்கது

No comments