வீட்டுக்கு சென்ற இராணுவத்தினருக்கு புனர்வாழ்வு?

இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களிற்கு கோத்தபாய புனர்வாழ்வளிப்பதை தொடர்கின்றார்.அவ்வகையில் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ்  மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டு தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக (சிஎன்ஐ) நியமிக்கப்படவுள்ளார் என கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கஜபா ரெஜிமென்ட்டின் முன்னாள் மூத்த அதிகாரியான  மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ்  யாழ். பாதுகாப்புப் படைகளின் தளபதி உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த போது, உருவாக்கப்பட்ட அதிபர் காவல்படையின் தளபதியாகவும் பணியாற்றினார்.
இஸ்ரேலுக்கான  சிறிலங்காவின் துணைத் தூதுவராகவும் இவர்  பணியாற்றியுள்ளார்.

No comments