பிரபாகரன் பற்றி பேசுவதை சீமான் நிறுத்த வேண்டும்!

"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்தும், ஈழப் பிரச்சனை குறித்தும் சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது. தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது.

விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்கள் எனத் தெரிவித்த அவர், ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் - என்றார்.

No comments