சம்பிக்கவை தொடர்ந்து ரிசாத்


முன்னாள் அமைச்சர் சம்பிக்கவை தொடர்ந்து றிசாத் கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (19) முற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, நேற்று (18) மாலை கைது செய்யப்பட்டு இன்று (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 
சட்டமா அதிபரினால் கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆலோசனையின் படி முன்னாள் அமைச்சர் கைதுசெய்யப்பட்டதுடன், நேற்று இரவு,  கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

No comments