ஜதேக அங்கவீனம் அடையவில்லை!

வலையில் சிக்கிய குருவிகள் போன்றல்லாது வலையை கிழித்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான சட்டத்தரணிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இக்கலந்துரையாடல் நேற்று (18) சிறிக்கொத்தவில் இடம்பெற்றது.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளினால் நாம் பின்னடைவைச் சந்தித்தோம். இருப்பினும், அதனால் நாம் உடைந்து அங்கவீனம் அடையவில்லை. பிரிந்து நின்று இந்தப் பயணத்தைச் செல்ல முடியாது. ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கட்சியின் எதிர்கால தலைமைத்துவத்தை கையேற்கவுள்ளவர்கள் இணைந்து செயற்பட வேண்டும். இதன்படியே, கட்சியின் மீள்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
நாம் அடுத்த ஐந்து வருடங்களை நோக்கியல்ல திட்டமிட வேண்டும். அடுத்த தசாப்தத்தை நோக்கியேயாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments