ஏட்டிக்கு போட்டியாக இலங்கை அரசு அறிக்கை

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தப்பட்ட விவகாரத்தில் இலங்கை, தேசிய சட்டம் மற்றும் சர்வதேச நீதி தரங்களை முழுமையாக கடைப்படித்தது என்று இலங்கை வெளிவிகார அமைச்சு நேற்று (18) இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தூதரக ஊழியரின் விவகாரம் தொடர்பில் சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸி இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உடன் இன்று மாலை தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதன்போது அவருக்கு வழங்கப்பட்ட பதில்கள் தொடர்பில் வெளியிடப்பட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளனர்.

அதன்படி சுவிஸ் தூதரக ஊழியர் தண்டனைச் சட்டத்தின் 120 மற்றும் 190 பிரிவுகளில் குற்றங்களைச் செய்ததாக நியாயமான சந்தேகத்தின் பேரில் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்ட குற்றச்சாட்டு அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி குற்றச்சாட்டை நியாயப்படுத்தக் கூடிய மற்றும் நீதித்துறையை எந்தக் கட்டத்திலும் பயன்படுத்துவதற்கான தவறான ஆதாரங்களை காட்டுகின்றது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உரையாடலின் போது சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான நல் உறவுகளை கருத்தில்கொண்டு இந்த செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு சாத்தியமான அனைத்து ஒத்துழைப்புக்களையு விரிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த தினேஷ் குணவர்த்தன, குறித்த சுவிஸ் தூதரக ஊழியர் இலங்கை பிரஜை என்றும் இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சட்டத்தின்படி இலங்கை அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும். குறித்த ஊழியருக்கு சாத்தியமான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டது. அவரது அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சுவிஸ் வெளிவிகார அமைச்சின் அறிக்கை தொடர்பில் தெரிவிக்கையில், இலங்கை தேசிய சட்டம் மற்றும் சர்வதேச நீதித் தரங்களை முழுமையாகக் கடைப்பிடித்தது என்றும், அதற்கு மாறான எந்தவொரு கூற்றும் உண்மையில் தவறானது என்றும் வலியுறுத்தினார். எனவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments