அரசுக்கு சிவாஜி விடுத்த எச்சரிக்கை!

தமிழர் தாயகப்பகுதிகளில் இடம்பெறும் மணற்கொள்ளைக்கு பின்னணியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் உடந்தையாக இருக்கின்றார்களா என்ற அச்சம் காணப்படுவதாக சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த மணல் கொள்ளைக்கு முடிவுகட்டாவிட்டால் ஆளுநர் அலுவலகத்தை முருகையிட்டு தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
மணல் எடுத்து செல்வதற்கு அனுமதிப்பத்திரம் தேவையில்லை என அரசாங்கம் அறிவித்ததில் இருந்து, அரச கணிகளுக்குள் மட்டுமல்லாமல் தனியார் காணிகளுக்குள்ளும் மணல் எடுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுக்கொண்டிருக்கும் பொது மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள் என கேள்வியெழுப்பிய சிவாஜிலிங்கம் மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியறுடுத்தினார்.
மேலும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை இந்தியாவில் இருந்து தாய்நாட்டுக்கு திரும்பும் மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என சொல்லப்பட்டாலும் கூட அவரகளது சொந்த இடங்கள் வன இலாகாவின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக சிவாஜிலிங்ககும் குற்றம் சாட்டியுள்ளார்.

No comments