கூட்டமைப்பை பிரிக்க எண்ணவில்லை- விக்கி

கொள்கை ரீதியாக ஒன்றுபட்டவர்களை மாத்திரம் எமது மாற்று அணியில் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை எமது அணியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் எனவும் கூட்டமைப்பை பிரிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
வடமராட்சியில் மருதங்கேணிப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கொள்கை ரீதியாக இதுவரை களமும் அங்கிருந்து வெளியேறவில்லை.
ஆனால் பொதுத் தேர்தலை இலக்காக கொண்டு கூட்டமைப்பில் இருந்து விலகி எம்முடன் இணைய முற்பட்டால் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை தமக்கு இல்லை என கூறினார்.

No comments