தொடங்கியது கூட்டமைப்பின் தேர்தல் பரபரப்பு!


கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளது உள்ளக பிளவுகளை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்றைய தமிழரசுக்கட்சி மாநாட்டிற்காக வருகை தந்துள்ள இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற பங்காளி கட்சிகளது கூட்டத்தில் ஒருமித்து ஒற்றுமையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முடிவு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கினைப்புக் குழுக் கூட்டம் மாட்டீன் வீதியில் உள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலமையில் நடைபெற்றது.

குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவருடன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை.சேனாதிராசா , த.சித்தார்த்தன் , செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் தமிழ் அரசுக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் , சி.சிறிதரன் மற்றும் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.
உட்கட்சி பிளவால் பாதிக்கப்பட்டுள்ள ரெலோவின் சார்பில் தலைவருடன் வினோநோதரலிங்கம் , ஜெனா உள்ளிட்டோரும் புளட் அமைப்பில் தலைவருடன் மாமனிதர் சிவராம் கொலையாளி ராகவன் , சிவனேசன் உட்பட மொத்தம் 15 பேர் கலந்து கொண்டனர்.

குறித்த சந்திப்பில் கூட்டமைப்பின் எதிர்கால வேலைத்திட்டம் தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பின்பு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் புரச்சணைகள் மற்றும் எதிர்வரும் நாடாளுமன்றில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிற்கான மாவட்ட ரீதியிலான ஒதுக்கீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

No comments